நெற்கதிரை பயன்படுத்தி பால் பாயாசம் - குருவாயூர் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி
கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில், திருவோண பண்டிகைக்கு முன்னோடியாக இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக குருவாயூர் கோயில் முற்றத்தில், ஆயிரத்து 200 நெற்கதிர் கட்டுகள் கொண்டு வரப்பட்டு அடுக்கப்பட்டன. அதிலிருந்து ஒரு கைப்பிடி அளவு நெற்கதிரை எடுத்து, பட்டு துணியில் கட்டி குருவாயூரப்பனின் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நெற்கதிரை பயன்படுத்தி பால் பாயாசம் தயார் செய்து, இறைவனுக்கு படைக்கப்பட உள்ளது
Next Story