பூமியை அழிக்க காத்திருக்கும் சூரிய புயல்.. மனிதகுலத்தை காக்க போகும் "ஆதித்யா L1"

x

இஸ்ரோ விண்ணில் ஏவ இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் என்ன செய்யும் என்பதை இப்போது பார்க்கலாம்...

நிலவை தொட்டுவிட்ட இஸ்ரோ, சூரியனை நோக்கி முதல் விண்கலமாக ஆதித்யா எல்-1-யை அனுப்புகிறது. இந்த விண்கலம் என்ன செய்யும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசிய போது, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

"லெக்ரேஞ்சியன் பாயிண்ட்-1 பூமியையும் சூரியனையும் இணைக்கும் புள்ளி"

"ஒரு பக்கம் சூரியன் ஈர்ப்பு விசை. மறுபக்கம் பூமியின் ஈர்ப்பு விசை"

"லெக்ரேஞ்சியன் பாயிண்ட்-1-யை விண்கலம் சுற்றி வரும்"

"பூமியை சூரியனை சுற்றுவது போல் லெக்ரேஞ்சியன் புள்ளியும் சுற்றும்"

"விண்கலம் ஒரு பக்கம் சூரியனையும், மறுபக்கம் பூமியையும் பார்க்கும்"

"சூரினை 24 மணி நேரமும் விண்கலம் மூலம் ஆய்வு செய்ய முடியும்"

இப்படி சூரியனை ஆய்வு செய்வதற்கான காரணம், சூரியனிலிருக்கும் மாறங்களை அறிவதாகும் என்றார்.

மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி

"விண்ணில் அணு உலை போலதான் சூரியன் செயல்படுகிறது"

"சூரியனில் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது"

"மத்தியில் வெப்பம் அதிகம், மேற்பரப்பில் குறைவு, குரோமோஸ்பியரில் அதிகம்"

சூரியனில் சூரிய புயல்கள் போன்றவற்றை முன்கூட்டியே தெரியும் போது, ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்ப மையமாக விளங்கும் செயற்கைக்கோள்கை பாதுகாக்கலாம் என்றார் மயில்சாமி அண்ணாதுரை...

"சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறியலாம்"

"60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செயற்கைக்கோள்களை காக்கலாம்"

"செயற்கைக்கோள்கள் அடிப்படையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்"

"முன்கூட்டியே அறியும் போது செயற்கைக்கோள்களை பாதுகாக்கலாம்"

உலகம் முழுவதற்கும் அதிவேக இன்டர்நெட் வசதியை வழங்கும் நோக்கில் எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது. அப்படி அந்நிறுவனம் அனுப்பிய 40 செயற்கைக்கோள்கள் 2022 பிப்ரவரியில் வானில் ஏற்பட்ட சூரிய புயலால் தூக்கி எறியப்பட்டது.

இப்போது சூரிய செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை கவனிப்பதில் அதிக பலன்கள் கிடைக்கும் என குறிப்பிடுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

சந்திரயான்-3 விண்கலம் போன்று உலகமே வியப்போடு எதிர்நோக்கியிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலமும் வெற்றியை வசமாக்கும்.. விண்வெளியில் ஒரு காப்பானாக விளங்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்