40 ஆயிரம் சிம் கார்டுகள்.. ரூ.1.80 கோடி.. யாருயா நீ.. மிரண்ட போலீஸ் | Sim card | Thanthitv
ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு சிம் கார்டு வழங்குவதில் முக்கிய மூளையாக செயல்பட்டவரை கேரளா மாநிலம் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மலப்புரத்தில் ஆன்லைன் மோசடி மூலம் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாயை இளைஞர் இழந்தார். இது தொடர்பான புகாரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு மோசடிக்கு உடந்தையாக சிம்கார்டுகள் வழங்கிய நபர் குறித்து தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல் ரோஷன் என்பவரை
கர்நாடக மாநிலம் மடிகேரியில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைதான நபரிடம் இருந்து 40 ஆயிரம் சிம் கார்டுகள், 180க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் ஸ்கேனர்களை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story