பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Siddaramaiah
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது, சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் மரணம் அடைந்த சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தி அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி போராட்டத்திய தற்போதைய முதல்வர் சித்தராமையா, அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் மீது மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், முதல்வர் சித்தராமையா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.