சித்தராமையா மீதான முறைகேடு வழக்கு.. அதிரடி காட்டும் அமலாக்கத் துறை | Siddaramaiah

x

சித்தராமையா மீதான முறைகேடு வழக்கு.. அதிரடி காட்டும் அமலாக்கத் துறை | சிடடரமைச்

கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மைசூர் மேம்பாட்டு ஆணையத்தில் 14 மனைகளை தனது மனைவிக்கு பெற்றதாக சமூக ஆர்வலர் சின்மயி கிருஷ்ணா, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபோது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், 14 வீட்டு மனைகளையும் மைசூர் மேம்பாட்டு ஆணையத்திற்கு திரும்ப ஒப்படைப்பதாக சித்தராமய்யாவின் மனைவி பார்வதி கடிதம் எழுதியிருந்தார். இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமலாக்கத்துறையிடம் சின்மயி கிருஷ்ணா புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், மைசூர் மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், சித்தராமய்யாவின் மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்