"சுதந்திர தின உரையில கூடவா ஒரு பிரதமர் இப்படி பேசணும்?" - நொந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்

x

அடுத்தாண்டில் பிரதமர ் மோடியால் தனது வீட்டில் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற முடியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்ற பிரதமர் மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் இருப்பதாக தெரிவித்தார். மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என கூறியது பிரதமரின் ஆணவத்தை காட்டுவதாகவும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்பவரால் எப்படி நாட்டி கட்டிஎழுப்ப முடியும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்