ஆண் நண்பரோடு சிக்கிய சீரியல் நடிகை... ஹவுஸ் ஓனருக்கு ஹனிட்ராப் வலை...
- கேரள மாநிலத்தில் உள்ளது பரவூர் காவல் நிலையம்... போலீசாரின் வாகனத்திற்குள் முகத்தை மூடியபடி உட்காந்திருப்பவர் சீரியல் நடிகை நித்யா, மற்றும் அவரது பாய் பெஸ்டி வினு.
- குறுக்கு வழியில் பணம் பறிக்க நினைத்தவர்கள் கடைசியில் போலீசாரின் பொறியில் சிக்கி இருக்கிறார்கள்.
- கலலம் அருகே உள்ள பரவுர் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதகச் சொல்லி டூலெட் போர்ட்டை மாட்டி இருக்கிறார்.
- அதோடு ஆன் லைனிலும் வீடு வாடகைக்கு கிடக்கும் என விளம்பரம் கொடுத்திருக்கிறார். இதை பார்த்துவிட்டு எத்தனையோ பேர் முதியவரின் வீட்டுக்கதவை தட்டி இருக்கிறார்கள் ஆனால் யாருக்கும் அவர் போட்ட கன்டிஷன் ஒத்து வரவில்லை.
- இந்த நிலையில் தான் ஒரு நாள் முதியவரின் செல்போனுக்கு நித்தியா அழைத்திருக்கிறார். தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு வாடகை வீட்டை குறித்து விசாரித்திருக்கிறார். அட்வாண்ஸ், வாடகை, கரண்ட் பில் என அத்தனைக்கும் பேராம் பேசாமல் ஓகே சொல்லி இருக்கிறார் நித்யா.
- இதனால் இருவருக்கும் டீல் ஓகே ஆகி இருக்கிறது. தனக்கு நேரம் கிடைக்கும் போது நேரில் வந்து வீட்டை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிடுவதாக நித்தியா கூறியிருக்கிறார்.
- ஆனால் அந்த ஃபோன் கான்வர்ஷேஸன் அதோடு முடிந்துவிடவில்லை. ஹவுஸ் ஓனருக்கு அடிக்கடி கால் செய்து நலம் விசாரிக்க தொடங்கி இருக்கிறார் நித்யா .
- இதனால் இருவருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த முதியவர் கேரளா பல்கலைகழகத்தில் வேலை பார்த்து வெல் செட்டிலானவர் என்பதையும், தற்போது தனியாக வசித்துவருகிறார் என்பதையும் தெரிந்து கொண்ட நித்யா,
- தனது பாய் பெஸ்டி வினுவுடன் சேர்ந்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்.
- அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வினுவை அழைத்துக் கொண்டு முதியவரின் வீட்டிற்கு வந்திருக்கிறார் நித்யா. அவர்கள் இருவருக்கும் வீட்டை சுற்றி பார்த்த பிறகு. திடீரென ஹவுஸ் ஓனரை மிரட்ட தொடங்கி இருக்கிறார்கள். அவரது ஆடைகளை வலுகட்டாயமாக அவிழ்த்து நித்யாவோடு ஆபாசமக இருப்பது போல புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து தப்பிச்சென்ற நித்யாவும் வினுவும், ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் செய்து 25 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.
- பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஆபாச படங்களை இனையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள்.
- மானத்திற்கு பயந்த அந்த முதியவர் தன்னிடம் இருந்த 11 லட்சம் ரூபாயை நித்யாவுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் மீதி பணத்தைக் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார் நித்யா.
- கொடுப்பதற்கு பணம் இல்லாத சூழலில் வேறு வழியிலாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஹவுஸ் ஓனர்.
- நித்தியாவை கையும் களவுமாக பிடிக்க நினைத்த போலீஸ், ஹவுஸ் ஓனர் மூலமே இருவருக்கும் பொறி வைத்திருக்கிறார்கள்.
- சம்பவம் நடந்த அன்று மீது பணத்தை கொடுப்பதாக ஹவுஸ் ஓனர் நித்தியாவையும் வினுவையும் பரவூருக்கு வர சொல்லியிருக்கிறார். பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்களின் கைகளில் விலங்கிட்டு பூட்டியிருக்கிறது காவல்துறை.
- இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
Next Story