செபி தலைவர் பிரபல வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியது ஏன்? - கிளம்பிய அடுத்த புயல்

x

செபி தலைவர் ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து 16 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபியின் தலைவராக மாதபி புச் இருக்கிறார். இவருக்கு அதானி குழும முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது காங்கிரஸ் கட்சியும் மாதபி மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதாவது பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி தலைவராக இருக்கும் மாதபி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து 16 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார். செபியின் முழுநேர உறுப்பினராக இருக்கும் போது, நீங்கள் வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்றது ஏன்...? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். செபி விதிகளை மீறியிருக்கும் மாதபி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்