வீட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்..! மகனை சுட்ட கொன்ற கொடூர தந்தை. நடுக்க வைக்கும் கொலை பின்னணி..
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர்,
சுரேஷ் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மது அருந்துவதற்காக, தனது மகன் நர்த்தன்போபண்ணாவிடம், பணம் கேட்டு சுரேஷ் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், மது அருந்த மீண்டும் பணம் கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் சுரேஷ் வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டதில், நர்த்தன் போபண்ணாவின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story