`சந்தேஷ்காலி' பாலியல் வன்கொடுமை... மம்தா ஆட்சிக்கு பெரும் சிக்கல்... மே.வங்கம் விரையும் டெல்லி

x

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, வரும் 19-ஆம் தேதி அந்த மாநிலத்துக்குச் செல்ல உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் என்பவர், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்ததால் அவர், தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, வரும் 19-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்துக்குச் செல்கிறார். அங்கு மாநில தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை தலைவரை சந்தித்து, சம்பவங்கள் குறித்து கேட்டறிகிறார். இதற்கிடையே, சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்