சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, நேற்று திறக்கப்பட்டது. நடையை திறந்தவுடன் ஏராளமான பக்தர்கள் 18 படிக்கட்டுகளில் ஏறி, ஐயப்பனை தரிசித்தனர். இந்த நடையானது, வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகிய பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும். கடைசி நாளான 19ஆம் தேதி, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30க்கு கோயில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story