சபரிமலையில் திடீர் மாற்றம்..! கொந்தளிக்கும் பக்தர்கள் | Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இந்த சூழலில், பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 80 ஆயிரமாக கட்டுப்படுத்தவும், ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்களை அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆன்லைன் பதிவு மட்டுமின்றி ஸ்பாட் புக்கிங் மூலம் 10 சதவீத பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சிகள், ஒவ்வொரு வருடமும் பக்தர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டின.
Next Story