சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

x

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம்போர்டில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். 14 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், முன்பதிவு செய்யாதோருக்கு தினமும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டு டிசம்பர் கடைசி வாரம் வரை திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்