வழி தவறி சென்ற 4 ஐயப்ப பக்தர்கள்.. சன்னிதானத்திற்கு ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்ததால் பரபரப்பு

x

சபரிமலையில் அடர்ந்த வனப்பகுதியில் வழி தெரியாமல் தவித்த 4 ஐயப்ப பக்தர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான நடை திறக்கப்பட்டதில் இருந்து, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,

புதுச்சேரியைச் சேர்ந்த பத்மா, திருச்சியைச் சேர்ந்த முத்து உள்ளிட்ட 4 பேர், புல்லுமேடு வழியாக சன்னிதானத்திற்கு நடந்து வந்த நிலையில் இரவு நேரத்தில் திசை மாறி நீண்ட தூரம் வனப் பகுதிக்குள் சென்று மாட்டிக் கொண்டனர். அவர்களுடன் வந்த குழுவினர் அளித்த தகவலின்பேரில், பேரிடர் மீட்பு படையினர் சன்னிதானத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிக்கித் தவித்த 4 பேரையும் மீட்டு, ஸ்ட்ரெச்சரில் சன்னிதானத்திற்கு அழைத்து வந்தனர். உரிய சிகிச்சை பெற்ற பிறகு அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்