உக்கிரமாக நடக்கும் உக்ரைன் ரஷ்யா போர்.. சரியான நேரத்தில் உதவிய அமெரிக்கா

x

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றியது. அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகிறது. உக்ரைனிற்கு நிதி மற்றும் ஆயுதங்கள் அளிக்க வகை செய்யும் மசோதா பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேறியது. இந்நிலையில் செவ்வாய் அன்று திடீரென்று உக்ரைன் சென்ற அமெரிக்க வெளியுறாவுத் துறை அமைச்சர் அன்டனி பிளின்கென், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அமெரிக்கா அனுப்பியுள்ள ராணுவ உதவிகள் உக்ரைனிற்கு விரைவில் வந்து சேரும் என்றும், ரஷ்யாவின் தாக்குதல்களை சமாளிக்க இவை உதவும் என்று பிளின்கென் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி, கார்கிவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலை சமாளிக்க பேட்ரியாட் ஏவுகணைகள் உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்