ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி..சென்னை மீது குவியும் உலகின் கவனம்

x

ரஷ்ய பயணத்தின் போது ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடம் மூலம் கப்பல் இயக்குவது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்க வாய்ப்புள்ளது...உக்ரைன் போரால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்த நிலையில், இந்தியா அதற்கு மாறாக குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருந்து இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது... ரஷ்யாவில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் வந்து சேர 40 நாள்கள் வரை ஆகும் நிலையில், அதில் பாதியாக இருபதே நாள்களில் விளாடிவாஸ்டோக்கில் இருந்து சென்னைக்கு சரக்குக் கப்பல்களை இயக்கும் வகையிலான திட்டம் குறித்து பிரதமர் மோடி புதினுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரமும் எரிபொருளும் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மருந்துகள், ஜவுளி, மின்னணு பொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றை அதிகமாக இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும், இந்திய ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்