பல்கலைக்கழகத்தில் RSS பாடலுக்கு கிடைத்த தனி மரியாதை.. சர்ச்சையாகும் வைரல் வீடியோ | RSS | Thanthitv

x

கர்நாடகாவின் கல்புர்கியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ்-ன் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் "குரு பூஜை" விழாவுக்கு மாணவர்கள் குழு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் பாடலுக்கு பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் வணக்கம் செலுத்தும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சரும், மல்லிகார்ஜுன் கார்கேவின் மகனான பிரியங்க் கார்கே, தரமான கல்வி வழங்குவதற்கு பதிலாக பல்கலைக்கழகங்கள் ஆர்எஸ்எஸ் கிளையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா, ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்றும், இந்த நிகழ்ச்சி மாணவர்களால் நடத்தப்பட்டது என்றும், எனவே நிகழ்ச்சியை நடத்த அனுமதிப்பதில் தவறில்லை என்றும் கூறி இருக்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்