ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை வழக்கு...முக்கிய குற்றவாளிக்கு செக் வைத்த என்.ஐ.ஏ
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ருத்ரேஷ் கடந்த 2016ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹெப்பல் சட்டமன்றத் தொகுதியின் தலைவர் கௌஸ் மற்றும் அசிம் ஷெரிப் ஆகியோரால் தீட்டப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் தலைமறைவாக இருந்த அவர்கள் தான்சானியாவின் டார் இ சலாமில் இருந்து வந்தபோது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் என்ஐஏ குழுவினரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story