பெண் காவலர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த தமிழிசை..

x

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. மரியாதை செலுத்திய நிகழ்வில், பெண் காவலர்கள் பங்கேற்றது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த தமிழிசை செளந்தரராஜன், ராயல் சல்யூட் அடித்தார். முன்னதாக, அதே விமானத்தில் வந்த கன்னியாகுமரி எம்.பி.யும், தனது சித்தப்பாவின் மகனுமான விஜய் வசந்திடம் நலம் விசாரித்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்