உயரும் மின்கட்டணம்... ஆளுநர் ஒப்புதல் - ஷாக் கொடுத்த புதுவை அரசு... EB

x

புதுச்சேரியில், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vovt

மின் கட்டண நிர்ணயம் குறித்து விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்த நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 6 ரூபாய் 35 பைசாவில் இருந்து 7 ரூபாயாகவும், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் 45 காசிலிருந்து 6 ரூபாயாகவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசாவிலிருந்து 6 ரூபாயாகவும் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய பின் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்