மகளிர் இட ஒதுக்கீடு - `ஷாக்' கொடுத்த உச்சநீதிமன்றம்

x

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்குப்பின் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இட ஒதுக்கீட்டை 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு நடைமுறைபடுத்த உத்தரவிடக்கோரி, காங்கிரசை சேர்ந்த ஜெயா தாகூர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதில் சிரம‌ம் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட முடியாது என்றனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்