பர்சனல் லோன், வீடு, கார், பைக் லோன் வாங்கியோருக்கு தித்திப்பான செய்தி சொன்ன ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான
வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதங்களில்
எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இதனால் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன்
ஆகியவற்றின் மீதான வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும்
இருக்காது.
கடந்த 18 மாதங்களாக ரெப்போ வட்டி விகிதங்களில்
மாற்றம் இல்லாமல் 6.5 சதவீதமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் சில்லறை விலைவாசி நாலரை சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தென்மேற்கு பருவ மழையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
காரணமாக சில்லறை விலைவாசி உயர்விலிருந்து வரும்
நாட்களில் சற்று நிவாரணம் கிடைக்கும் என குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நிய
செலாவணி இருப்பு, 67 ஆயிரத்து 500 கோடி டாலராக, புதிய
உச்சத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார்.