சூறையாடிய ரீமால் புயல்.. நிலச்சரிவு, ஏற்பட்ட பேரழிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
ரீமால் புயலால் மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்டு வரும் நிலச்சரிவு மற்றும் அடை மழையால், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரீமால் புயல் கரையை கடந்து, வலுவிழந்துவிட்ட நிலையிலும், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்தது. மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து அடைமழை பெய்ததால், நிலச்சரிவுகள் ஏற்பட்டு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இரவு 7 மணி வரை, மிசோரம் மாநிலத்தில் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகியுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். மாநில பேரிடர் நிவாரண நிதியாக 15 கோடி ரூபாய் வழங்குவதாக மிசோரம் முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.