11 பேரை காவு வாங்கி ஆக்ரோஷமாய் புயல் கரையை கடக்கும் பகீர் காட்சி

x

வங்கதேசத்தில் ஜலகத்தி, பரிஷல், பட்டுவகாலி, பிரோஜ்பூர் உட்பட 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்த‌து. இதனால், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 146 கால்நடைகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், போலா மற்றும் பரிஷல் மாவட்டங்களில் தலா 3 பேரும், சட்கிரா, குல்னா, சிட்டகாங்க் மற்றும் பட்டுவாகாலி மாவட்டங்களில் தலா ஒருவர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். மழைப்பொழிவு நின்றுவிட்டதாகவும், புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்