கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் குறைப்பு

x

கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திங்கள்கிழமை காலை வெளியேற்றப்படும் நீரின்அளவு 12 ஆயிரத்து 631 கன அடியாக இருந்த நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி 9 ஆயிரத்து 311 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும், திங்கள்கிழமை காலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு 17 ஆயிரத்து 776 கன அடியாக இருந்த நிலையில், மாலையில் 10 ஆயிரத்து 811 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்