டாடாவின் முதலும் கடைசியுமான ஆசை.. இறக்கும் வரை நிறைவேறாமல் போன சோகம்

x

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை..... தனது காதல் திருமணம் வரை சென்று நடக்காமல்போனதை அவர் நினைவுகூர்ந்ததை தற்போது பார்ப்போம்......

Humans of Bombay என்ற பேஸ்புக் பக்கத்திற்கு கொடுத்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ரத்தன் டாடா பகிர்ந்து இருந்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தபோது காதல் வயப்பட்டதாகவும், அது திருமணம் வரை சென்றதாகவும் டாடா கூறி இருந்தார்.

திருமணம் செய்துகொள்வோம் என காதலியை அழைத்தபோது இங்கே இந்தியா-சீனா போர் நடந்ததால் இந்தியாவுக்கு அனுப்ப காதலியின் பெற்றோர் மறுத்துவிட்டதாகவும், பின்னாளில் பிரிந்தோம் என்றும் அவர் கூறியிருந்தார்

அதே பேட்டியில் தனது தாய் தந்தையின் மன முறிவு தன்னை எப்படி பாதித்தது என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

தனது தாய் இரண்டாவது திருமணம் செய்தபோது, பள்ளியில் சக மாணவர்களின் பேச்சால் தானும் தனது சகோதரனும் மிகவும் புண்பட்டதாகவும் டாடா கூறி இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்