இறக்கும் முன் டாடா சொன்ன வார்த்தைகள்.. காலத்துக்கும் நின்னு பேசும் கடைசி சம்பவம்
மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது எப்படி என்பதை பார்ப்போம்.
லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் அணையா தீபத்தை ஏற்றிய ரத்தன் டாடா என்ற தீபம் அணைந்தது..ஆம்..
பணமும், வசதியும் இருப்பவர்களிடத்தில் மட்டுமே கார், என்றிருந்த நிலையை மாற்றி... சாமான்ய மக்களின் இல்லங்களில் கார்களை நிறுத்தி அழகு பார்த்தவர்...
இன்றைய காலகட்டத்தில் பைக்கின் விலையே 2 லட்சம் என்ற சூழலில், அந்த 2 லட்சத்துக்கு தன் டாட்டா நிறுவனம் மூலம் காரை விற்பனைக்கு இறக்கி மார்க்கெட்டை அதிர செய்திருந்தார்..
அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, பட்டதாரி இளைஞர்களின் கனவான ஐபிஎம் நிறுவனத்தின் வேலையை உதறி விட்டு, இந்தியாவில் எண்ட்ரி கொடுத்தபோது... இந்தியாவில் பெரும் தொழிற் புரட்சியே ஏற்பட வழிவகுத்தது..
அந்தளவுக்கு மாபெரும் வேலை வாய்ப்பை உருவாக்கி, நேரடியாகவும், மறைமுகமாவும் லட்சக் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் அணையா தீபத்தை ஏற்றி இருக்கிறார்...
நமது சாப்பாட்டில் உள்ள உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், இரும்பு, நகை, டெலிகம்யூனிகேஷன், கன்சல்டன்சி என அனைத்திலும் டாடா நிறுவனத்தின் பங்கு இருக்குமளவுக்கு தனது நிறுவனத்தை விசாலப்படுத்தினார் ரத்தன் டாடா...
இந்தளவுக்கு தொழிற்துறையில் கோலாச்சிவரும் ரத்தன் டாடா... உலக பணக்காரர்களின் பட்டியலில் கிடையாது..
காரணம்.. ஏழை மக்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளை செய்து வந்தார்...
ஏன், கொரானா காலகட்டத்தில் இந்தியர்கள் திண்டாடிய போது, கொரானா நிவாரண நிதியாக சுமார் ஆயிரத்து ஐநூறு கோடியை ரத்தன் டாடா வழங்கியதை இந்தியர்கள் மறக்க முடியாது..
1937 குஜராத்தின் சூரத் நகரில் பிறந்த ரத்தன் டாடா.. செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர் நிலையில், படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்பிய போது... வந்த உடனே டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்கவில்லை..
டாடா குழுமம் தனது சொந்த நிறுவனமாக இருந்தாலும், நிறுவனத்தின் சிறு சிறு பொறுப்புகளை வகித்து சுமார் 30 வருட அயராத உழைப்பிற்கு பிறகே, டாடா குழுமத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் 1991 இல் நியமிக்கப்பட்டிருந்தார்...
தனது தலைமைக்கு பிறகு பல சாதனைகளையும், தொழிற் புரட்சியையும் நிகழ்த்திய டாடா... தன் நிறுவன வர்த்தகத்தை உலக சந்தைக்கும் விரிவுப்படுத்தி, இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிப்போனார்..
கூடவே, 1932இல் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸை... 1953இல் ஏர் இந்தியாவாக பெயர் மாற்றி அப்போதைய மத்திய அரசு நாட்டுடைமையாக்கிய நிலையில், அதனை மீண்டும் 2020ல் டாடா நிறுவனம் வாங்கியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது...
துருப்பிடித்தலை தவிர வேறு எதனாலும் இரும்பை அழிக்க முடியாது.. அதுபோல ஒரு மனிதனுக்கு துருவான அவனின் மனநிலை சரியாக இருக்க வேண்டும் எனவும்... உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை கொண்டு கட்டடங்கள் எழுப்புங்கள் எனவும் கூறி இந்திய இளைஞர்களை நல் வழிப்படுத்தி வந்த ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு...