ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. "அயோத்திக்கு வரவேண்டாம்..ஆனால்.." - PM மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை, நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார். கும்பாபிஷேகம் அன்றே மக்கள் அயோத்திக்குச் செல்ல வேண்டாமென பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், கும்பாபிஷேக நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில், நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பூத் தளவில் பெரிய அளவிலான திரைகளை அமைக்குமாறும், கும்பாபிஷேக தினத்தன்று தனிப்பட்ட முறையில் சமூக சேவைகளில் ஈடுபடுமாறும், நிர்வாகிகளை பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்