ஆறாக மாறிய NH..."அடுத்து 7 நாட்களுக்கு மழை.." - வெளியான எச்சரிக்கை
கேரளாவில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கொச்சி, கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட கனமழை பெய்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இது அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொல்லம் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆறு போன்று மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.