பிரதமர் மோடியை நேரடியாக அட்டாக் செய்த ராகுல் காந்தி

x

பிரதமர் மோடியை நேரடியாக அட்டாக் செய்த ராகுல் காந்தி

#hariyana #congress #rahulgandhi #pmmodi #bjp #thanthitv

அரியானா மாநிலம் நூ பகுதியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, நாட்டில் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு இப்போது என்ன கிடைக்கிறதோ அதெல்லாம் அரசியல் சாசனம் வழங்கியது என்றார். அரசியல் சாசனம் மட்டும் இல்லை என்றால் ஏழைகளுக்கு எதுவுமே இருக்காது, அனைத்து செல்வங்களும் 25 கோடீஸ்வர்களுக்கு மட்டுமே செல்லும் என்றும் தெரிவித்தார். அதனாலேயே அரசியல் சாசனத்தை காப்பாற்ற காங்கிரஸ் போராடி வருவதாகவும் தெரிவித்தார். கோடீஸ்வரர்களுக்காக ஆட்சி செய்யும் பிரதமர் மோடி, கோடீஸ்வரர்கள் கடனை மட்டுமே தள்ளுபடி செய்கிறார், ஆனால் விவசாயிகள், ஏழைகள் கடனை தள்ளுபடி செய்வது இல்லை என்றும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்