சிறுமியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற வழிப்பறி கும்பல் - 3 கைதிகளுக்கு மாவுக்கட்டு
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் சிறுமியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஜலந்தர் பகுதியில் 18வயது இளம்பெண், 200 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானது. கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை பாதுகாக்க போராடிய இளம்பெண் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை கவனித்த பஞ்சாப் காவல்துறை, லத்தீபுராவைச் சேர்ந்த பவன்ப்ரீத் சிங், ககன்தீப் சிங், லவ்ப்ரீத் சிங் ஆகிய 3 பேரை கைது செய்தனர். வழிப்பறி சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று திருடர்களின் ஒரு கால் உடைக்கப்பட்டு அவர்கள் நொண்டி நொண்டி நடக்கும் காட்சியை பஞ்சாப் காவல்துறை வெளியிட்டுள்ளது.
Next Story