மகன் கொலையானதை மறைத்து தாய், தந்தை கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

x

மதுபோதையில் தினசரி அடித்து தொல்லை கொடுத்த மகனை கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் - தனம் தம்பதி. இவர்களுடைய மூத்த மகன் வீரமணி, மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. திருட்டு வழக்கில் கைதாகி கடந்த ஐந்து தினங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்து இருக்கிறார். மது போதையில் பெற்றோரை தினமும் அடித்து துன்புறுத்தி வந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தாக்கியதில் வீரமணி உயிரிழந்து இருக்கிறார். கொலையை

மறைப்பதற்காக, வீரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி இருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வீரமணி உடம்பில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததால், சந்தேகமடைந்த போலீசார் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தொடர்ந்து மது போதையில் தங்களை மகன் வீரமணிதாக்கி வந்ததால், ஆத்திரத்தில் மகனை அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து கணேசன்

தனம் என இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்