"புதுச்சேரியில் திருநங்கைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள்"
புதுச்சேரி சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணியாற்றும் திருநங்கைகளிடம், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் பாலியல் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருநங்கைகள் கோஷங்களை எழுப்பினர்.
Next Story