துணைநிலை ஆளுநரை சுற்று போட்ட பெண்கள்.. "எங்களுக்கு பட்டா வேணும்.." அடுக்கடுக்காக வைத்த கோரிக்கை
புதுச்சேரியில் கோர்க்காடு ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தது பரபரப்பு ஏற்பட்டது. நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக கோர்க்காடு ஏரியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது, துணைநிலை ஆளுநரை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், துணை நிலை ஆளுநரை முற்றுகையிட்ட பெண்கள், மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
Next Story