இன்ஸ்டாவில் காதல் ரீல்ஸ் அனுப்பி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

x

காரைக்கால் தலத்தெருவை சேர்ந்த 21 வயதான அப்துல் அகமது என்பவர் அங்குள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக உள்ளார். அப்துல் அகமதுவுக்கு காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காதல் பாடல்களை ரீல்சாக அனுப்பி மாணவியை காதல் வலையில் விழ வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய அப்துல் அகமது, அவரை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது தாயார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்துல் அகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராமில் காதல் ரில்ஸ் விட்டு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்