"என் அம்மா இடம்; மொத்தமும் போச்சே.." கண்முன்னே சரிந்த 3 மாடி வீடு "சனியனாய் மாறிய வாய்க்கால் பள்ளம்" கலங்கடிக்கும் பெண்ணின் கதறல்

x

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சாவித்திரி, அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தார். வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தார். வீட்டின் பின்புறம் ஓடும் உப்பனாரு வாய்க்காலுக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக, பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்ரியின் வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இகுறித்து சுற்றுச் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் அவர் முறையிட்டிருந்தார். இன்று அந்த வீடு அதிகமாக சாய்ந்து நின்றதால், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிக் கொண்டிருந்தபோது, வீடு திடீரென அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்