hostel housefull என கூறி நாடகம் - தங்க இடம் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்
புதுச்சேரியில் விடுதி அறைகள் நிரம்பியதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தங்கி தங்க செயின், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற திமுக நிர்வாகி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜோதி என்பவர், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி, மதுபோதையில் வீடு திரும்பிய ஜோதியை வழிமறித்த இருவர், விடுதி அறைகள் நிரம்பியதால் தங்க இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது வீட்டில் இருவரையும் ஜோதி தங்க வைத்த நிலையில், மறுநாள் அவரின் இருசக்கரவாகனம், தங்க செயின் உள்ளிட்டவற்றை இருவரும் திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பரமக்குடியை சேர்ந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.
Next Story