DK சிவகுமாருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு.. கர்நாடக உள்துறை எடுத்த முடிவு
கர்நாடகாவில், டி.கே.சிவகுமாரின் அலுவலகம், வணிக நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அந்த அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணையைத் தொடங்கின. அவர் மீது வழக்கு தொடர்வதற்கு அப்போதைய பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, டி.கே.சிவகுமாருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதை எதிர்த்து, டி.கே.சிவகுமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 29-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், சிபிஐ விசாரணையை வாபஸ் பெறுவதற்கான மாநில உள்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.கே.சிவகுமாரை விசாரிக்க அப்போதைய பாஜக அரசு சிபிஐக்கு வழங்கிய அனுமதியை அரசு திரும்பப் பெறவுள்ளது.