பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

x

பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி, இன்று மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு நான்காயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா - பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலை என ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்