"ஒரு தலைவருக்கு ரூ.100 கோடி".. பிரசாரத்தில் ஓபனாக உடைத்த பிரஷாந்த் கிஷோர்
ஒரு தேர்தலில் ஒரு கட்சிக்கோ, ஒரு தலைவருக்கோ தேர்தல் வியூகங்களை வகுக்க 100 கோடி ரூபாய் பெறுவதாக தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர், ஜன் சூரஜ் கட்சியை தொடங்கி பீகாரில் 4 சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் அவர், பெலகஞ்ச் பொதுக்கூட்டத்தில் பிரசாரங்களுக்கு எப்படி நிதி திரட்டுகிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். தனது ஆலோசனையில் இந்தியாவில் 10 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது என கூறிய பிரசாந்த் கிஷோர், ஒரு தேர்தலில் ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ ஆலோசனை வழங்கினால் கட்டணமாக100 கோடி ரூபாயை பெறுகிறேன் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது பிரசாரத்திற்கு தேவையான நிதியை பெற ஒரே ஒரு ஆலோசனையை மட்டும் வழங்கினாலே போதுமானது எனவும் தெரிவித்தார்.