"பிரஜ்வல் பதிலளித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை" - வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்

x

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவு அமைச்சகம் அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது தொடர்பாக இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் கீழ், வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக கடந்த மே 23ஆம் தேதி அவருக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவருடைய பதிலுக்காக காத்திருப்பதாகவும் அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்....


Next Story

மேலும் செய்திகள்