JUSTIN || நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் - நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்து வந்த ரேவன்னா நாளை நள்ளிரவு பெங்களூரு திரும்புகிறார். ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து பெங்களூருக்கு பிரஜூவல் ரேவண்ணா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 31ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பிரஜுவல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனிடையே ஹெச்.டி. ரேவண்ணா வுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி தன் மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி எச்டி ரேவண்ணா இரண்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது எஸ் ஐ டி ரேவண்ணாவுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து கொண்டது. இதனிடையே எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஹாசன் இல்லத்தில் எஸ்ஐடி மற்றும் எஃப்எஸ்எல் குழுவினரின் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. SIT மற்றும் FSL குழுவினர் பத்து மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்தனர் பிரஜ்வல் ரேவண்ணா வசித்த அறையில் இருந்த படுக்கை, தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை எஸ்ஐடி எடுத்துச் சென்றது. மே 31-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா வருவார் என்ற செய்திக்கு இடையே எஸ்ஐடி முக்கிய ஆவணங்களை சேகரித்து வருகிறது. SIT மற்றும் FSL குழு துணை ஆதாரங்களுடன் வெளியேறியது. சாட்சியங்களை சேகரித்த பின்னர், எஸ்ஐடி குழு பெங்களூரு புறப்பட்டது.