"புறவாசல் வழியில் பணி நியமனம்..மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? - உயர்நீதிமன்றம் கேள்வி
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் புறவாசல் வழியாக சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுவதாகவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமித்து பின் அவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும் கூறி, புதுவையைச் சேர்ந்த அய்யாசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மீறி புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக கூறி கோபி கண்ணன் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தனர் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சட்டவிரோத நியமனங்களை நியாயப்படுத்த ஏன் புதுச்சேரி அரசு போராடுகிறது என கேள்வி எழுப்பினார்.
முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க வேண்டும் எனவும்,
வேண்டப்பட்டவர்களுக்கு புறவாசல் பணிநியமனம் கொடுத்து, தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? அவர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.
16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு நியாயமான தேர்வை நடத்த முடியாதா என கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோதமாக பணிநியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த நீதிபதி,