"ஆஹா என்ன மனுஷன்யா இந்த மாதிரி மனுசங்க இருக்குறதால தான் மழை பெய்யுது" | Pondicherry
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை, ஆட்டோ ஓட்டுநர் மீட்டுக் கொடுத்தார். நேபாளத்தில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர், தன்னுடைய விலை உயர்ந்த செல்போனை தான் பயணித்த ஆட்டோவிலேயே மறந்து விட்டுச் சென்றார். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர், அப்பெண் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரது தகவல்களை சேகரித்து, அப்பெண் இருக்கும் இடத்திற்குச் சென்று செல்போனை ஒப்படைத்தார்.
Next Story