காங்கிரசின் இந்த ஒரு ஃபார்முலா..கரித்துக்கொட்டிய பிரதமர் மோடி | PM Modi | India

x

இந்து சமூகம் பற்றி எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புவதாக, பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சி இளைஞர்களை குறிவைத்து எத்தனையோ வழிகளில் தூண்டிவிட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

பிரித்தாள்வது, அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற ஃபார்முலாவைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்றி வருகிறது என்றும்..

ஒரு பொறுப்பற்ற காட்சி என்பதை, காங்கிரஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறது எனவும் அவர் விமர்சித்தார்.

இந்து சமூகம் தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும், இந்து சமூகத்தை பிளவுபடுத்தி, அதனை தங்களது கட்சியின் வெற்றிக்கான ஃபார்முலாவாக மாற்றி முயற்சிக்கிறது என்றும் அவர் சாடினார். இந்திய பாரம்பரியத்தையும், சனாதன பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சி ஒடுக்குகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி கடும் விமர்சனம்

மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

"இளைஞர்களை எத்தனையோ வழிகளில் தூண்டிவிட காங்கிரஸ் கட்சி முயற்சி"

"பிரித்தாள்வது, அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் ஃபார்முலா"

"ஒரு பொறுப்பற்ற கட்சி என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும், காங்கிரஸ்"

"இந்து சமூகம் பற்றி எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது"

"சனாதன பாரம்பரியத்தையும் காங்கிரஸ் கட்சி ஒடுக்குகிறது"


Next Story

மேலும் செய்திகள்