"உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய உதவ வேண்டும்" - பிரதமர் மோடி வேண்டுகோள்

x

நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத் துறைக்கான பல முக்கியத் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்... 11 மாநிலங்களில் கிடங்குகள் மற்றும் 500 தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 18 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்சார்பு இந்தியாவை உருவாக்காமல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமல்ல எனக் குறிப்பிட்டார். இன்று நாடு முழுவதும் 8 ஆயிரம் விவசாய உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப் பட்டிருப்பதாகவும், இதன் வெற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்... பெண்களின் திறமையை கண்டு கூட்டுறவுத் துறை சார்ந்த கொள்கைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் சிறு தானியங்களை உலகத்தின் உணவு மேசைக்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், சமையல் எண்ணெய் போன்ற வேளாண் பொருட்களில் இந்தியாவின் இறக்குமதி சார்பைக் கூட்டுறவு அமைப்புகள் குறைக்க வேண்டும் எனவும் அவற்றை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்