நாட்டையே உலுக்கிய பிரஜ்வல் விவகாரம்... முதன்முறையாக மௌனம் கலைத்தார் மோடி... பரபரப்பு பேட்டி
கர்நாடகத்தில் உள்ள ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்... பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு புலனாய்வுகுழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பதிலளித்த பிரதமர் மோடி, இதுபோன்ற பிரச்சினைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்... மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்த பிரதமர், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story