"ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு... முதன்முதலாக சத்திய பிரமானம்..'' - PM மோடி அதிரடி
ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேறியதில் முழு நாடும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்...நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், வளர்ந்த இந்தியா என்ற கனவை அடைவதில் நாடு புதிய வேகத்தைப் பெறவும் ஒரே நாடு ஒரே தேர்தலை வெற்றிகரமாக நடத்த தங்கள் அரசு உழைத்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பொது சிவில் சட்டத்தை நோக்கி நகரும் நிலையில், அது மதச்சார்பற்றது என விளக்கினார்.இந்தியாவின் மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம், நாம் ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துவதாக தெரிவித்த பிரதமர்,அதற்கு புதிய கல்விக் கொள்கை ஒரு பிரகாசமான உதாரணம் என்றும், இதை தேசம் பெருமையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்...
சுதந்திரம் அடைந்து 7 தசாப்தங்களுக்குப் பிறகு ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேறியதில் முழு நாடும் இன்று மகிழ்ச்சி அடைகிறது என தெரிவித்தார்.
கடந்த 70 ஆண்டுகளாக அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவில்லை என்றும்,
அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரை உச்சரிப்பவர்கள் அதை அவமதித்ததாகவும் தெரிவித்த அவர், காரணம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 என்றும் அந்தச் சட்டம் நிரந்தரமாக புதைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் பாரபட்சமின்றி நடந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர்,முதன்முதலாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் இந்திய அரசியலைப்பு சாசனத்தின் மீது சத்திய பிரமானம் செய்ததாகவும், இந்தக் காட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மன நிறைவை அளித்திருக்கும் என்றும், இதுவே நமது அஞ்சலி எனவும் தெரிவித்தார்.