பிரதமர் மோடி வேதனை | Pm Modi | Delhi | India

x

இந்தியா தனது வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பின்தங்கியுள்ளது வருத்தத்திற்குரியது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதாம்மா தினம் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரித்தற்கான கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 14 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பெளத்த துறவிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புத்த தம்மம் குறித்த நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புத்த மத துறவிகளுக்கு பிரதமர் மோடி பொன்னாடை வழங்கி மரியாதை செலுத்தினார். பாலி மொழி மற்றும் புத்த பெருமானின் வார்த்தைகளை அதன் அசல் விழுமியங்களுடன் வாழ வைப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என தெரிவித்த பிரதமர் இந்தப் பொறுப்பை தமது அரசு நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைவதாக

குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் அடிமை மனநிலைக்கு பலியாகி விட்டதாக தெரிவித்த பிரதமர், இந்தியா இன்று தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்