பெட்ரோல் பங்கில் வீசப்பட்ட குண்டு..மிரளவிடும் சிசிடிவி | petrol bunk
பஞ்சாப் அருகே பெட்ரோல் பங்கில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மான்சா மாவட்டம் சிர்சா சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு, பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு வெளிநாட்டு மொபைல் எண்ணிலிருந்து ரூபாய் 5 கோடி பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வெடி விபத்திற்கு கையெறி குண்டு ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வெடிவிபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story